Cinema News


நாற்பது வயதை நெருங்க, நெருங்க சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க - healthier

Published: 03:47

இன்றைய சூழலில் நாற்பது வயது வரை வாழ்வது என்பது கடந்த நூற்றாண்டுகளில் நூறு வயதை எட்டுவதுப் போல ஆகிவிட்டது. சரியாக கூற வேண்டுமானால், சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை போல, நாம் டி20-யை போல!! வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! சுவாரஸ்யம், அவசரம், பேரின்பம், சோம்பேறித்தனம் என பல விஷயங்கள் நமது வாழ்நாளைக் குறைத்துக் கொண்டுப் போகிறது. நாற்பது வயதை நெருங்கும் அதே வேளையில் தான், பல உடல்நலக் கோளாறுகள் நம்மையும் நெருங்கி வருகிறது. 


சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! உட்கார்ந்தே வேலைப் பார்ப்பது, கணினியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதுப் போன்ற வேலைகள் நிறையவேப் பாதிப்புகளைத் தருகிறது. இந்த ஏழு உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால், நீங்கள் நடுவயதில் கூட நடனம் ஆடலாம்..வயதாக, வயதாக கலோரிகள் குறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். உடல் வேலைகள் குறைவாக இருக்கும் போது அதிக கலோரிகள் கொண்ட உணவினை சாப்பிடுவதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பதனால் தான் நிறைய உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது.இரட்டிப்பு மடங்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவும்.

பெரும்பாலும் நாற்பதை தாண்டுபவர்களுக்கு எலும்பு சார்ந்தப் பிரச்சனைகள் தான் முதலில் ஏற்படுகிறது.உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே, நேரம் தவறாது தேவையான அளவு நீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இதுப் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க வெகுவாக உதவும்.வயதாகும் போது உங்கள் சிறுநீரகங்களின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். 

அதனால், கடின உணவுகளைத் தவிர்த்து பெரும்பாலும் நீராகாரம், பழரசம், பழங்கள், காய்கறிகள் போன்றவையை சாப்பிடுவது நல்ல ஆரோக்கியம் தரும்.முடிந்தவரை இயற்கையான உணவு வகைகளை மட்டும் உட்கொளுங்கள். கல்லையும் கரைக்கும் வயதைத் தாண்டி நீங்கள் நடைப்போட்டுக் கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம். 

சாட் உணவுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.மதியம், மற்றும் இரவு வேலை உணவு சாப்பிட்டப் பிறகு குறைந்தது 10 அல்லது 15 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கும்.






Pageviews


📰 Latest News


    Contact Form

    Name

    Email *

    Message *

    Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
    Templates Created By BTResponsive| Boost Your Skills