Cinema News
கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள் - liver friendly foods
Published: 22:49
உடலின் உள்ளுப்புக்களில் ஒன்று தான் கல்லீரல். இந்த கல்லீரல் உடலுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய கிளைகோஜனை சேமித்து வைப்பது, இரத்த சிவப்பணுக்களை சீர்செய்து இரத்தத்தை சுத்தப்படுத்துவது, செரித்த உணவுகளில் இருந்து புரோட்டீனை பிரிப்பது மற்றும் உடலில் சேரும் பல்வேறு நச்சுக்களை நீக்குவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.
இவ்வளவு வேலையை செய்து உடலின் ஆரோக்கியத்தைக் காக்கும் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இதன் இயக்கம் சிறிது குறைய ஆரம்பித்தாலும், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காக்க புகைப்பிடித்தலை நிறுத்துவதோடு, கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்க ஒருசில உணவுப்பொருட்களை உட்கொள்ளவும் வேண்டும். இதனால் சிறு இடைவெளிகளில் கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றலாம்.பூண்டுகளில் செலினியம் மற்றும் அல்லிசின் போன்ற கல்லீரலை சுத்தப்படுத்த தேவையான பொருட்கள் உள்ளன. ஆகவே இதனை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால்,
கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றலாம்.பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமையாக நிறைந்துள்ளது. இதனால் கல்லீரலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் இதனை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற்று, தடையின்றி கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறும். எனவே ஆப்பிளையும் முடிந்த அளவில் தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.பச்சை இலைக்காய்கறிகளான ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றையும் அவ்வப்போது சாப்பிட்டு வர வேண்டும்.
இதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.வெங்காயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்டுகள் அதிகம் உள்ளது. அதனால் தான் அன்றாட சமையலில் வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வருகிறோம்.