Cinema News
'லப்பர் பந்து' இயக்குனரின் அடுத்த படம்: தனுஷுக்கு பிரத்யேகமான ஸ்கிரிப்ட்! ('Lubber Bandhu' Director's Next Film: A Special Script for Dhanush!)
Published: 02:12
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் அவர்களின் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், 'லப்பர் பந்து'. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தனுஷ்-க்காகவே உருவாகும் கதை!
'லப்பர் பந்து' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தனது அடுத்த படத்தில் நடிகர் தனுஷை இயக்கவுள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் அவர்களின் Dawn Pictures நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இது குறித்துப் பேசிய தமிழரசன், “நான் தனுஷை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். அவருக்காகவே பிரத்யேகமாக ஒரு கதையை உருவாக்கி வருகிறேன். இந்தப் படம் 'லப்பர் பந்து' திரைப்படத்தை விடவும் சிறப்பாக இருக்கும். இந்தப் படம் தனுஷ் ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் என அனைவரையும் ஈர்க்கும்” எனக் கூறியுள்ளார்.