Cinema News
த்ரிஷா நிகழ்ச்சிக்கும் டக்ளஸ் ஆட்களுக்கும் சம்பந்தமே இல்லை... ஏற்பாட்டாளர்கள் விளக்கம்!trisha
Published: 11:35
கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த மார்ச் 29-ம் தேதி தமிழ் ஒன் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் த்ரிஷா. இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்ட கனடிய தமிழ் இணையதளங்கள் சில, 'டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்டிருக்கிறார்.
இது தமிழர் விரோத செயல்,' என்று கண்டித்திருந்தனர். இதுகுறித்து நாமும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் தமிழ் ஒன் மற்றும் வணக்கம் எப்எம் நிறுவனத்தினர். அவர்கள் அளித்துள்ள விளக்கம்: கனடிய தமிழர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கம் ஊடகம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது.
ஒரு நல்ல நோக்கத்துக்காக நடந்த விழா இது. இதனை பிரபலப்படுத்தவே சென்னையிலிருந்து நடிகை த்ரிஷாவை அழைத்தோம். விழாவில் SAAC அமைப்பு சார்பில் 25000 டாலர்களை 120 ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு த்ரிஷா கையால் வழங்கினோம்.
மேலும் இந்தக் குழந்தைகளுக்கு உதவ 10 பேர் தலா 1500 டாலர் செலுத்தி ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்தனர். இந்த நல்ல நோக்கம் கொண்ட நிகழ்ச்சியை டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்கள் செய்ததாக கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.
UP