ஆண்ட்ராய்டு எம் சிறப்பம்சங்களை கூகுள் வெளியிட்டது android-m
Posted By: UnknownPublished: 03:24
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ|ஓ 2015 மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் சில சிறப்பமசங்களை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டின் அடுத்த வகை இயங்குதளமாக குறிப்பிடப்படும் ஆண்ட்ராய்டு எம் வாடிக்கையாளர்களின் பயன்பாடுகளை மேம்படுத்தும் என கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் டேவிட் புர்க் தெரிவித்தார். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு எம் சிறப்பம்சங்களாக கூகுள் அறிவித்தவற்றை பாருங்கள்...
ஆண்ட்ராய்டு எம் கூகுளின் புதிய இங்குதளத்தில் செயலிகள் அதிகபடியாக மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் டுவிட்டர் தளத்தை பயன்படுத்த அதன் ஐகானை க்ளிக் செய்தால் அந்த செயலியானது எந்த ப்ரவுஸரில் சிறப்பாக இயங்கும் என்பதை அறிந்து ஆண்ட்ராய்டு எம் தானாக அந்த ப்ரவுஸரில் ஓபன் செய்யும்.
ஆண்ட்ரா்டு ஸ்மார்ட்போன்களின் ஸ்டான்ட்பை பேட்டரி நேரத்தை அதிகரிக்கும் வகையில் டோஸ் என்ற ப்ரெத்யேக அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் யுஎஸ்பி டைப் சி என்ற புதிய வகை சார்ஜிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது கருவியை சார்ஜ் செய்ய வேண்டுமா அல்லது மற்ற கருவிகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.
ஐபோன்களில் இருக்கும் டச் ஐடி போன்றே ஆண்ட்ராய்டிலும் வழங்கப்பட்டிருக்கும் புதிய அம்சம் தான் கைரேகை ஸ்கேனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக பாதுகாப்புடன் பண பறிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பே முறையானது வாடிக்கையாளர்களை என்எஃப்சி மூலம் பணம் செலுத்த வழிவகுக்கின்றது. இதோடு அமெரிக்காவில் மட்டும் சுமார 700,000 சில்லறை விற்பனை நிலையங்களில் ஆண்ட்ராய்டு பே பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் படிக்கும் முறை பிரபலமாகி வருவதை தொடர்ந்து ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் க்ரோம் கஸ்டம் டேப் என்ற புதிய அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த அம்சமானது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செயலிகளில் க்ரோம் கஸ்டம் டேப் பட்டன் வழங்குவதோடு, அதே செயலியில் க்ரோம் ப்ரவுஸரை ஓபன் செய்யவும் வழி செய்கின்றது.
ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முறை அதிகளவில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட செயலியை தங்களுக்கு ஏற்றவாரு பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு எம் டெக்னிக்கல் ப்ரீவியு இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதோடு இந்தாண்டிற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment