தாணியங்கி முறையில் இயங்கும் பறக்கும் கேமரா தான் லிலி - automated flying camera
Posted By: UnknownPublished: 03:57
பறக்கும் டிரோன்கள் அனைவருக்கும் சிறந்த ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. டிரோன் கேமராக்களை இரு கைகளை கொண்டு சரியாக கவனம் செலுத்தி தெளிவாக இயக்க வேண்டும். அழகான வீடியோக்களை படமாக்க டிரோன்களை பயன்படுத்த வேண்டாம் என்கின்றது லிலி. தற்சமயம் ஆய்வு மற்றும் சோதனை பணிகளில் இருக்கும் பறக்கும் கேமரா தான் லிலி. முற்றிலும் தாணியங்கி தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் லிலி குறித்து மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து வரும் ஸ்லைடர்களை பாருங்கள்..
லிலி தாணியங்கி கேமராவின் மொத்த எடை 1.3 கிலோவாகும். குறைந்த எடை என்பதால் எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும்.லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கேமராவினை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்து 20 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.தண்ணீரில் பட்டாலும் எதுவும் ஆகாத படி IP67 சான்று வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால் மழை நேரங்களிலும் பிரச்சனை இல்லாமல் படமாக்க முடியும்.
குறைந்த பட்சமாக 5 அடியில் துவங்கி அதிக பட்சம் 50 அடி அதாவது 15 மீட்டர் உயரம் வரை செல்ல கூடிய லிலி அதிகமாக சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்க முடியும்.12 எம்பி புகைப்படங்களை எடுக்கமளவு சிறப்பான கேமராவை கொண்டிருப்பதோடு 1080p 60 fps / 720p 120 fps அளவு ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்யும். இதோடு சிறப்பான போகஸ் மற்றும் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்களும் இருக்கின்றது.அக்செல்லோமீட்டர், மேக்னெட்டோமீட்டர், பாரோமீட்டர், ஜிபிஎஸ், முன்பக்க கேமரா, கீழ் பக்க கேமரா போன்றவைகள் லிலியின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாகும்.லிலி கேமராவில் ஸ்டேட்டஸ் எல்ஈடி, பவர் பட்டன், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சார்ஜ் போர்ட் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.
4 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு வழங்கப்பட்டிருப்பதோடு கூடுதலாக மெமரி கார்டு ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.இந்த செயலியை பயன்படுத்தி கேமரா செட்டிங்ஸ் மாற்ற முடியும், ப்ரெத்யேக ஷாட்களை எடுக்க முடியும்,
புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடிட் செய்து பகிர்ந்து கொள்ளவும் முடிவதோடு இந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது.75 கிராம் எடை கொண்ட க்ராக்கிங் கருவியும் வாட்டர் ப்ரூஃப் செய்யப்பட்டுள்ளதோடு மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் 4 மணி நேர பேக்கப் கொண்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment