சென்னை +2 மாணவி கழுத்தை அறுத்து படுகொலை - வாலிபர் வெறிச்செயல்.t

Posted By:
Published: 00:29

சென்னை மீஞ்சூர் அருகே உள்ளது மணலிபுதுநகர். இங்குள்ள 270–வது பிளாக்கில் வசித்து வருபவர் இன்பராஜ் (வயது 41).
                    வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி, கிருஷ்ணவேணி (40). இவர்களது மகள் அனுபாரதி (17), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். 

                       இவர்களுடைய சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் உள்ள திருவழுதிவிளை கிராமம் ஆகும்.

அதே கிராமத்தை கிராமத்தை சேர்ந்த கருவேலமுத்து என்பவரின் மகன், ஜெயராமன் (23). ஜெயராமன் இன்பராஜின் உறவினர் ஆவார்.

                               இருவருடைய வீடும் கிராமத்தில் எதிர் எதிரே இருந்தன. உறவினர் என்ற முறையில் வாலிபர் ஜெயராமன் அடிக்கடி சென்னையில் உள்ள இன்பராஜின் வீட்டிற்கு வந்து செல்வார்.

பெண்கேட்டு வந்தார்


ஜெயராமன், மாணவி அனுபாரதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணலிபுதுநகரில் உள்ள இன்பராஜ் வீட்டிற்கு நேற்று ஜெயராமன் வந்தார்.

                           அப்போது கிருஷ்ணவேணி, அவருடைய மகள் அனுபாரதி இருவரும் வீட்டில் இருந்தனர்.

கிருஷ்ணவேணியிடம், ‘‘உங்கள் மகள் அனுபாரதியை திருமணம் செய்ய விரும்புகிறேன், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று ஜெயராமன் கூறி இருக்கிறார். 

                                   அதற்கு கிருஷ்ணவேணி, அனுபாரதி தற்போது பள்ளி படிப்பு படித்து வருவதால் பின்னர் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

கத்தியால் அறுத்து..


அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது கிருஷ்ணவேணி, மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தார்.

                               தான் ஒருதலையாக காதலித்த அனுபாரதியை திருமணம் செய்து வைக்க கிருஷ்ணவேணி மறுத்துவிட்டதால் ஜெயராமன் ஆத்திரம் அடைந்தார்.

                                          தான் விரும்பிய பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில், வீட்டில் தனியாக இருந்த மாணவி அனுபாரதியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்தார்.

பின்னர் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வீட்டில் இருந்து அவர் தப்பி ஓடினார். தகவல் அறிந்ததும் தெருவில் இருந்த பொதுமக்கள் ஜெயராமனை பிடித்து அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து மணலிபுதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனை கைது செய்தனர்.

வாக்குமூலம்


பிணமாக கிடந்த அனுபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராமனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜெயராமன் கூறியதாவது:.–


‘‘நாங்கள் இருவரும் உறவினர்கள். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கிராமம் அருகே உள்ள திருவழுதி விளையில் எதிரெதிர் வீட்டில் வசித்து வந்தோம். சிறுவயதிலேயே அனுபாரதியை எனக்கு திருமணம் செய்து கொடுக்க உள்ளதாக தெரிவித்ததால் நான் ஒரு தலையாக அனுபாரதியை காதலித்து வந்தேன்.

அடிக்கடி வருவேன்


                          நான் அடிக்கடி மணலிபுதுநகருக்கு வந்து செல்வேன். நான் அஞ்சல் வழி கல்வி மூலம் 2–ம் ஆண்டு பொருளாதார பட்டபடிப்பு படித்து வருகிறேன். இந்த ஆண்டு அனுபாரதி பிளஸ்–2 படித்து முடிக்கிறார்.

                            ஆகவே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தூத்துக்குடியில் இருந்து தனியாக வந்து கிருஷ்ணவேணியிடம் பெண் கேட்டேன்.

                                       ஆனால், மகளை திருமணம் செய்து வைக்க கிருஷ்ணவேணி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நான் அனுபாரதியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வெளியே வந்தேன். 

                                அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்’’.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills