லிப் லாக் காட்சிகளில் நடிக்க எனக்கு டபுள் ஓகே ..! லட்சுமி மேனன் பரபரப்பு ..!n

Posted By:
Published: 00:28

                  கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு என லட்சுமிமேனன் நடிப்பில் வெளி வந்தது என்னவோ நான்கே படங்கள் தான். ஆனால், அதற்குள் ரசிகர்கள் அவரை முன்னணி நடிகைகளுள் ஒருவராக்கி விட்டனர்.
           தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமிமேனன். 

                     இப்படத்தில் விஷாலுடன் லிப்லாக் காட்சியில் நடித்தது பற்றியும், தனது அனுபவங்களை செய்தியாளார்களுடன் பகிர்ந்து கொண்டார் லட்சுமிமேனன். 

அப்போது அவர் கூறியதாவது :-

                   சென்னையில் நான் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது பொறியாளர் ஒருவர் வந்து நான் தீவிர ரசிகன் என்னுடைய வீட்டில் உங்களது போட்டவை தான் மாற்றி வைத்துள்ளேன் என்று கூறினார் என்னுடைய செல்போனிலில் கூட உங்களது புகைபடத்தைத் தான் வைத்து உள்ளேன் என்று கூறினார். 


இதை பார்த்த நான் வியந்துபோனேன்.எனக்கு இவ்வளவு ரசிகர்களா என பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.

நான் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இது ஒரு வெற்றியாக கருதுகிறேன் இது போன்ற ரசிகர்கள் எனக்கு கிடைத்துள்ளதால் நான் தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்' என இவ்வாறு லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills