பாகிஸ்தான் விரும்பும் 3 'ஏகே': துப்பாக்கி, ஆண்டனி, கேஜ்ரிவால்: மோடி தாக்கு!m

Posted By:
Published: 03:32

                                   ஜம்முவில் இன்று பிரசாரம் மேற்கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலைக் குறி வைத்து தாக்கிப் பேசினார். இந்திய, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ஹிரா நகர் என்ற இடத்தில் இந்த கூட்டம் நடந்தது. மோடி கூட்டத்தையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
                                    மோடி பேச்சிலிருந்து.... தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிகரமான அரசை மத்தியில் கொடுத்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர் ஆரம்பித்து பூர்த்தி செய்ய முடியாத பணிகளை நாங்கள் நிறைவேற்றுவோம. இன்று மூன்று ஏகேக்கள்தான் நாட்டை அழித்து வருகின்றன. 

                                  ஒன்று ஏகே 47, இன்னொன்று ஏகே. அந்தோணி, இன்னொன்று அரவிந்த் கெஜ்ரிவால். இந்த மூன்றுமே நாட்டுக்கு எதிராகவே செயல்படுகின்றன. எனவேதான் நமது நாட்டை விட பாகிஸ்தானில் இந்த மூன்று ஏகேவுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. 

                                           இவர்கள்தான் பாகிஸ்தானின் புதிய சக்திகள், பாகிஸ்தானின் ஏஜென்டுகள். வாரிசு ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் சிக்கியுள்ளது. அதை மீட்க நாம் போராட வேண்டும். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நான் பாடுபடுகிறேன். ஏழைகளுக்காக உழைக்கிறேன். 

                                   வளர்ச்சி இல்லாமல் நமது பிரச்சினைகளை நாம் தீர்க்க முடியாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதம் பல அப்பாவிகளை மட்டுமல்லாமல், மனிதகுலத்தையும், காஷ்மீரத்தையும் கூட கொன்று குவித்துள்ளது. இங்கு கூடியிருக்கும் மிகப் பெரிய கூட்டம் பாஜக இந்த மாநிலத்தில் மீண்டும் தழைத்தோங்கப் போவதற்கு கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளது. 

                                ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் உறுதி அளிக்கிறேன் என்றார் மோடி. 

                                        பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஹிராநகரானது, பாகிஸ்தான் எல்லைக்கு சில கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே பாதுகாப்பு மிகப் பலமாக போடப்பட்டிருந்தது. கூட்டம் நடந்த ஹாக்கி ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இந்த நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

                            அதில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். உதம்பூர் நாடாளு்மன்றத் தொகுதிக்குட்பட்டது ஹிரா நகர். இங்கு பாஜக சார்பில் ஜிதேந்தர் சிங் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆசாத்துக்கு இதுதான் முதல் லோக்சபா தேர்தலாகும். 

                                        ஜம்முவில் மோடி பிரசாரம் செய்வது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசியிருந்தார். முதல் அதிகாரப் பூர்வ தேர்தல் பிரசாரக் கூட்டம் நாடு முழுவதும் தேர்தலுக்காக 185 இடங்களில் பாரத் விஜய் கூட்டம் என்ற பெயரில் பிரசாரம் செய்து பேசவுள்ளார் மோடி. 

                                         அதில் இதுதான் முதல் கூட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills