நான் தப்பி ஓடவில்லை, பதவியை தியாகம் செய்தேன் - அரவிந்த் கெஜ்ரிவால்.!AA

Posted By:
Published: 03:52

                                 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் முதலமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளதாகவும், தான் எதிலிருந்தும் தப்பி ஓடவில்லை எனவும் பேசியுள்ளார். வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிடுவது தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற அங்கு சென்ற கெஜ்ரிவால் மீது முட்டை மற்றும் கருப்பு மை வீசப்பட்டது.

                                  நாட்டில் ஊழலை முற்றிலுமாக அழிக்கவேண்டுமென்ற கொள்கையுடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராக உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவது ஒரு பெரிய விஷயமல்ல. 

                                    ஆனால், நாட்டை காப்பாற்றுவது தான் பெரிய விஷயம் என கூறியுள்ளார். இந்நிலையில், பெனியாபாக் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், நான் முதலமைச்சர் பதவியிலிருந்து தப்பித்து ஓடிவிட்டதாக பாஜக கூறி வருகிறது. 

                                       நான் சில கொள்கைகளுக்காகவே பதவியை விட்டு விலகினேன். அரசியல் கொள்கைகள், தியாகம் என்றால் என்னவென்றே பாஜக விற்கு தெரியாது. நான் சவால் விடுகிறேன். பாஜகவில் யாராவது பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடியுமா?என சவால் விட்டார். 

மேலும், பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என கேட்ட கெஜ்ரிவால், காங்கிரசும், பாஜக-வும் சேர்ந்து ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. அதனால்தான் பதவியை விட்டு விலக நேரிட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு ரயில் விபத்தின் காரணமாகவே அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரிபதவியிலிருந்து விலக நேரிட்டது. அப்போது பாஜக. இருக்கவில்லை, இருந்திருந்தால் அவரையும் கூட ஓடிப்போனதாக தான் கூறியிருப்பார்கள். 

                     தான் தனி மனிதன், தனக்கென ஒரு குடும்பம் இல்லை என்பதை மையப்படுத்தி, தனக்கு ஊழல் செய்ய காரணம் ஈடும் இல்ல என மோடி கூறுகிறார். இது அனங்கள் அவர்களது மனைவியால் தான் ஊழல் செய்கிறார்கள் என்ற தவறான கருத்தை தெரிவிப்பதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills