விபத்துகுள்ளனா மலேசிய விமானம் விரைவில் மீட்க்கப்படும்; தற்போது தேடும் பகுதியில் ஒரு பொருள் காணப்படுவதாக தகவல்

Posted By:
Published: 22:40





மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.


இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.


புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


மாயாமான மலேசிய விமானம் எம்.எச் 370 முன்பு கருதப்பட்டதை விட வேகமாக பயணம் செய்து இருக்கலாம் என இப்போது கருதப்படுகிறது.


நியூசிலாந்தின் ஆர்யான் விமானம் ஒன்று கடலில் பொருட்கள் கிடப்பதை பார்த்துள்ளதாகவும், இருந்த போதிலும் இந்த பொருட்கள் விமானத்தின் உடையது தான் என்பதை கப்பல்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதிப்படுத்தும் தகவல் கிஅட்டவில்லை எனவும் அமசா கூறி உள்ளது


இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான துப்புக்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகிறது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.


ராடார் தகவல்கள் அந்த விமானம், மேலும் மிக விரைவாக பறந்து கொண்டிருந்தது, எரிபொருளை அதிகமாக செலவழித்தது, என்று காட்டுவதை அடுத்து இந்த தேடல் வேட்டையில் மாற்றம் வருகிறது.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills