Cinema News


போஸ்னியாவில் கொன்று குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களின் உடல்கள்

Published: 22:15






போஸ்னியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டான்சியில் 1992 – 1995 நடந்த போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களின் உடல்களை அந்நாட்டு தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


போஸ்னியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டான்சி பகுதியில் கிடைத்துள்ள அறிகுறிகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று போஸ்னியாவின் காணாமற்போன மக்களுக்கான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் லெஜ்லாசெஞ்சிக் தெரிவித்துள்ளார்.


கடந்த 1990களில் பிரிஜிடர் பகுதியில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களின் பிணங்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர் தகவல் அளித்தார். 1992ஆம் ஆண்டு தொடங்கி 1995 வரை 3 ஆண்டு 9 மாதங்கள் நடைபெற்ற போரின் தொடக்கத்தில் இறந்த மக்களின் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.


போஸ்னியா நாட்டில் 44 சதவீத மக்கள் இசுலாமியர்கள். 31 சதவீதம் செர்பியர்கள். பிற மதத்தவர்கள் 17 சதவிகிதத்தினர் என்று வாழ்ந்த போது ஏகாதிபத்திய சக்திகளின் சதியால் ஏற்பட்ட கலவரம் போரக மாறியது. இந்த போரில் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணி விரைவில் தெடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2008 ஆம் ஆண்டு இப்போருக்கு காரணமான அதிபர் ரடோவன் கராட்சிக் கைது செய்யப்பட்டார்.



கடந்த 2013 ஆம் ஆண்டின் இறுதியில் போஸ்னியாவின் வடமேற்குப் பகுதியில் பிரிஜிடருக்கு அருகில் முன்னாளில் சுரங்கமாக செயல்பட்ட இடத்தில் ஒரு பெரிய கல்லறையைத் தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். அப்போது அங்கிருந்து கிட்டத்தட்ட 430 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அதன் பின்னர் இதுபோன்ற பெரிய பொதுமக்களின் கல்லறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.






Pageviews


📰 Latest News


    Contact Form

    Name

    Email *

    Message *

    Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
    Templates Created By BTResponsive| Boost Your Skills