ஐ.பி.எல்., சூதாட்டம்; தோனியும் குற்றவாளி ?

Posted By:
Published: 05:08



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ஐ.பி.எல்., கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் தொடர்பு உண்டு என்றும் அவரும் ஒரு குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டில் சால்வே என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணையை நடத்திய நீதிபதிகள், சென்னை, ராஜஸ்தான் அணியை சஸ்பெண்ட் செய்வது, தற்காலிக தலைவராக கவாஸ்கரை கோர்ட்டே நியமிப்பது உள்ளிட்ட முக்கிய அதிரடி முடிவுகளை எடுக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிடும் முன்னதாக பி.சி.சி.ஐ.,க்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்துள்ளது


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பெரும் சூதாட்டம் நடந்தது. சில விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மும்பை போலீசார் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத்சந்திலா, அங்கீத்சவான் ஆகிய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராஜஸ்தான் அணி உரிமையாளர்ராஜ்குந்த்ரா, சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் நடந்து வருகிறது. நேற்று கூட சீனிவாசன் பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் தோனியை மையமாக வைத்து ஒரு புயல் புறப்பட துவங்கியிருக்கிறது. சால்வே என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் இந்திய அணி மற்றும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணையில் வக்கீல் நீதிபதி முன் வைத்த வாதுரையில், தோனிக்கு தெரிந்து சில விஷயங்கள் நடந்திருக்கிறது. தோனி மேட்ச்பிக்ஸிங் குறித்து விசாரணக்கமிட்டியிடம் தவறான தகவலை கொடுத்துள்ளார். இதனால் இவரும் ஒரு குற்றவாளியே . இவர் முட்கல் கமிட்டி முன்பு தனது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும். மேலும் குருநாத்மெய்யப்பன் மீதான நடவடிக்கையில் சீனிவாசன் இடையூறாக உள்ளது. என்றும் கூறினார்.




இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியை சஸ்பெண்ட் செய்ய யோசனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிப்போம் என்றும் கூறியுள்ளனர். மேலும் பி.சி.சி.ஐ., சேர்மனாக சீனிவாசனுக்கு பதிலாக கவாஸ்கரை நியமிக்கலாம். மேலும் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்கள் பி.சி.சி.ஐ மற்றும் சென்னை அணியில் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர் .


முன்னதாக பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இருந்து விலக சொல்ல வேண்டாம் என்று சீனிவாசன் தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு வெளிவரும்போது சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் ஐ.பி.எல்.,லில் இல்லாமல் போய்விடும். இதனால் குருநாத் மெய்யப்பன், ஷில்பாஷெட்டி மற்றும் இவரது கணவர் ராஜ்குந்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills