Cinema News


மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்

Published: 05:06



நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய எரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியை பராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே காணலாம்.


1. பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும். பேட்டரிகளை அதிக நேரம்சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.


2. மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். டூப்ளிகேட் பேட்டரி உங்கள் போனை பாதிக்கும்.


3. ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.


4. நாம் தொடர்ச்சியாக மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது இதனால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கலாம்.


5. சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு குறைகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.அடிக்கடி பேட்டரியை மொபைலில் இருந்து கழட்டாதீர்.


6. முக்கியமாக பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை கூட ஏற்படலாம்.


ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும்.




இந்த செட்டிங்ஸ் என்ற பட்டனை அழுத்தினால் இதற்குள் நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஸ்குரோல் செய்தால் எபவுட் மெனு என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பேட்டரி யூசேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.


பேட்டரியின் ஆற்றலை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் வைபை நெட்வொர்க் வசதிக்கு எவ்வளவு பேட்டரி தீர்ந்திருக்கிறது, டிஸ்ப்ளே வசதிக்கு எவ்வளவு பேட்டரி செலவாகி உள்ளது போன்ற விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.


இதில் தேவையில்லாமல் அப்ளிக்கேஷனுக்கு பேட்டரி செலவானால், அதற்கு தகுந்த வகையில் அப்ளிக்கேஷன்களை குறைத்தோ அல்லது அகற்றுவதோ (டெலீட்டோ) செய்து கொள்ளலாம்






Pageviews


📰 Latest News


    Contact Form

    Name

    Email *

    Message *

    Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
    Templates Created By BTResponsive| Boost Your Skills