வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்......! Health..!

Posted By:
Published: 00:19

                          வெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

                                    வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால் உங்கள் உணவிற்கு சுவையேறும். குழம்புகள், காய்கறி கூட்டுகள், பருப்பு வகைகள் மற்றும் மேத்தி பரோட்டாவில் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. 
                                      ஆனால் வெந்தயம் என்பது மருத்துவ குணங்கள் அடங்கிய வளமையான கிடங்கு என்பது உங்களுக்கு தெரியுமா? வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு மற்றும் ஆல்கலாய்டு போன்றவைகள் அடங்கியுள்ளது. 

                                             அதில் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால், ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளும் அடங்கியுள்ளது. இந்த பொருட்களால் வெந்தயம் பல பலன்களை அளிக்கிறது. அதிலும் உங்களுக்கு அழகு சேர்ப்பது முதல் உங்கள் உடல்நல பிரச்சனைகளை தீர்ப்பது வரை அது பல உதவிகளை செய்கிறது. இங்கு வெந்தயத்தால் கிடைக்கும் 15 உடல்நல பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

                                      மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தேவையான பொருட்களில் முதலிடத்தை பெறுகிறது வெந்தயம். அதற்கு காரணம் அந்த மசாலாவில் உள்ள டையோஸ்ஜெனின் தான். இது பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவும்.

                                         கருப்பைக்குரிய சுருங்குதலை ஊக்குவிக்க வெந்தயம் உதவுவதால், குழந்தை பிறப்பை அது தூண்டும். பிரசவ வழியை குறைக்கவும் இது உதவும். 

                           ஆனால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை - கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது.

                                       வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்களுடன், டையோஸ்ஜெனின் மற்றும் ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற பொருட்கள் உள்ளதால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் தாக்கீடுடன் சம்பந்தப்பட்ட வலிகள் மற்றும் உபாதைகளை குறைக்க இது உதவும். 

                                                 மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். முதன் முதலில் மாதவிடாய் ஏற்படும் பருவத்தில், கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். 

                                                இந்நேரத்தில் உங்கள் உணவில் வெந்தய இலைகளை சேர்த்துக் கொண்டால், போதிய அளவிலான இரும்புச்சத்து கிடைக்கும். ஆனால் அதனுடன் உருளைக்கிழங்குகள் அல்லது தக்காளிகளை சேர்த்து கொண்டால் தான் இரும்புச்சத்து உறிஞ்சுதல் மேம்படும்.

உங்கள் மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்படியானால் உங்கள் தினசரி உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். 

                                      வெந்தயத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மார்பகங்களை பெரிதாக்க உதவும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆய்வுகளின் படி, கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக ஐது கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது.

                                                      இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். மேலும் இதில் வளமையான அளவில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த இது உதவும்.
                                                    சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெந்தயம் பெரிதும் உதவுகிறது. இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளதால், சர்க்கரையை இரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும்.

                                                             செரிமானத்தை ஊக்குவிக்கும் உடலிலுள்ள தீமையான நச்சுக்களை வெளியேற்ற வெந்தயம் உதவுகிறது. இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்.
நெஞ்செரிச்சலுக்கு தீர்வு உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். உங்கள் வயிற்று அக உறை மற்றும் குடலில், வெந்தயத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இரையக குடலிய தசைகளை இதமாக்கும். அதனை உட்கொள்வதற்கு முன்பாக, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தால், அதன் வெளிப்புறம் பசைத்தன்மையை பெறும்.
                                                வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், உங்கள் காய்ச்சலை குறைத்து, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். இதமாக்கும் குணத்தை கொண்ட வெந்தயத்தின் பசைப்பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்சலையும் நீக்கும்.
                                           வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உங்கள் உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உங்கள் உடலில் இருந்து வெளியேற்றும். இது உங்கள் பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
உடல் எடை குறைக்கும் டயட்டில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை மெல்லுங்கள். அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், உங்கள் பசியை அடக்கிவிடும்.
                                                       ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்துங்கள். அதில் தீக்காயம், கொப்பளம், சரும படை போன்ற பிரச்சனைகள் அடக்கம். மேலும் தழும்புகளை நீக்கவும் வெந்தயம் உதவுகிறது.
                                     வீட்டிலேயே தயார் செய்யும் அழகு சாதனமாக வெந்தயத்தை பயன்படுத்தலாம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, உங்கள் சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும்.
                                  வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். இன்னும் என்ன? பொடுகை விரட்டவும் வெந்தயம் பெரிதும் உதவும்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills