கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் வழிமுறைகள்! Health..!

Posted By:
Published: 00:30

                             உங்களுடைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலோ அல்லது கட்டான உடலமைப்பை பராமரிக்க வேண்டும் என்றாலோ, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊட்டமாக உயர்வான அளவில் வைத்திருப்பது தான் சிறந்த யோசனையாக இருக்கும். 
                                   இவ்வாறு உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை ஊட்டமுடன் வைத்திருக்க, தினமும் காலையில் உடற்பயிற்சி செய்தல் போன்ற சில வழிமுறைகள் இருந்தாலும், உணவும் ஒரு சிறந்த காரணியாக உள்ளது. 

                                           வளர்சிதை மாற்றத்தை உயர்வாக வைத்தல் என்றால், உடலின் கலோரிகளை வேகமாக எரித்தல் என்று பொருளாகும். உங்களுடைய வளர்சிதை மாற்றம் வேகமாக இருந்தால் தான், நீங்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் கலோரிகளை எரிக்க முடியும். 

                                  தளர்வான வளர்சிதை மாற்றம் உங்களுடைய உடல் எடை கூட காரணமாகி விடும், ஏனெனில் உடல் எரிக்கும் கலோரிகளை விட அதிகமாக நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள்.

   
                                      நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தினசரி உணவுப் பட்டியலில் காலை சிற்றுண்டியை சேர்த்துக் கொள்வது தான். பெரும்பாலானவர்களுக்கு சிற்றுண்டி சாப்பிடுவது பிடிக்காமல் இருந்தாலும், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாகத் தொடங்க காலை சிற்றுண்டி மிகவும் அவசியமாகும். 250 கலோரிகள் அடங்கிய உணவு போதும், காலை வேளையில் வளர்சிதை மாற்றம் ஊக்கம் பெறுவதற்கு.


                                உங்களுடைய உணவுடன் நறுமணமான காரங்களை சேர்த்துக் கொள்வதும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றுமொரு வழியாகும். இலவங்கப்பட்டை உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை 20 மடங்குகள் உயர்த்தக் கூடியதாகவும் மற்றும் ஒரு நாளைக்கு 1/4 தேக்கரண்டியில் இருந்து 1 தேக்கரண்டி வரை மட்டும் பயன்படுத்தினால் போதும் என்ற அளவிலும் உள்ள பொருளாகும்.

                             உங்களுக்கான உணவை திட்டமிடும் போது, கிவி பழத்தை சேர்த்துக் கொள்ளவும். கிவி பழங்களில் வைட்டமின் சி நிரம்ப உள்ளது, ஆனால் தினமும் 500 மில்லிகிராம் இந்த பழத்தை சாப்பிட்டால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை விட 39மூ அதிகமான கொழுப்பை உங்களால் கரைக்க முடியும். 

                           அதே நேரம், மிகவும் அதிகளவு வைட்டமின் சி சேர்த்துக் கொள்ள வேண்டாம். 2000 மில்லிகிராமிற்கும் அதிகமாக வைட்டமின் சி உடலில் சேர்ந்தால், வயிறு உப்புசமடைதல், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.
நீங்கள் என்ன குடிக்கிறீர்கள் என்பதை கவனிப்பது மற்றுமொரு வழியில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் வழியாகும். 

                           நீங்கள் குடிக்கும் பானத்துடன் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடல் அதிகமாக வேலை செய்ய வைக்க முடியும், இதன் உடலின் செயல்திறன் அதிகரிக்கும். மேலும், காபி அல்லது டீ போன்ற பானங்களை குடிக்கும் போதும், உடல் சுறுசுறுப்படைந்து செயல்திறன் அதிகரிக்கிறது.ங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் போலவே, எங்கே சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமான விஷயமாகும். காலையில் சிற்றுண்டி சாப்பிடும் வேளையில், ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டால், சற்றே சூரிய வெப்பத்திலும் திளைக்க முடியும். இந்த பளிச்சிடும் வெளிச்சம் உங்களுடைய உடலை ஊக்கப்படுத்தி, எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.

                  உங்களுடைய உடல் போதுமான அளவிற்கு கலோரிகளை எரிக்கும் வகையில், போதுமான அளவு குரோமியம் உள்ள உணவை உடலில் சேர்த்துக் கொள்ளவும். தக்காளியில் காணப்படும் குரோமியம், சிறந்த இணை உணவாக இருந்து கொழுப்புகளை வேகமாக எரிக்க உதவுகிறுது. 

                              இறைச்சி, முட்டைகள், பச்சை மிளகாய், ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் கீரைகள் ஆகியவற்றிலும் குரோமியம் உள்ளதாக மெட்லைன்பிளஸ் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 120மிகி குரோமியத்தை நீங்கள் உட்கொண்டால், உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்திறன் கிடைக்கும்.

                                      நீங்கள் உண்மையிலேயே உங்களுடைய உடலின் செயல்திறனை தூண்ட முடிவு செய்திருந்தால், ஒரு நாளில் நீங்கள் சாப்பிடும் உணவை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அவ்வப்போது சாப்பிடத் தொடங்கவும். நீங்கள் ஒவ்வொரு முறை இந்த உணவை சாப்பிடும் போதும், உங்களுடைய உடல் உறுப்புகள் ஊக்கம் பெற்று செயல்படத் துவங்குகின்றன. 

                      இதனால் அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை குறையும் அல்லது ஆரோக்கியமான எடை பராமரிக்கப்படும் என்ற புதியதொரு நிலை ஏற்படும்...!

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills