வருமான வரியை குறைக்க சூப்பரான வழிகள்..! TAX

Posted By:
Published: 04:29

                                              ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வரி செலுத்த தகுதியாக இருப்பவர்கள் தாங்கள் செலுத்தும் வரியின் அளவை குறைக்கும் பொருட்டாக, போதுமான அளவு விபரம் தெரியாத பல்வேறு வழிமுறைகளில் முதலீடுகளை செய்வார்கள். 

                                   சுய தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளை விட சம்பளம் பெறுபவர்கள் எளிதாக வரியை சேமிக்க முடியும். ஆனால், சம்பளம் பெறுபவர்கள் தங்களுக்கான வரியை செலுத்துவதில் திட்டமிடத் தவறுகிறார்கள். அதன் மூலம் உழைத்த பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். 
                                                      வரி சேமிப்பை திட்டமிடுவதற்கு போதுமான அளவு நேரமின்மை அல்லது பல்வேறு விதமான வரி சேமிப்பு திட்டங்கள் பற்றியோ அல்லது வருமான வரி சட்டத்தின் கீழ் வரியை திரும்ப பெறும் திட்டங்கள் பற்றியோ போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். 

                                           80C தள்ளுபடிகள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலமான பிரிவுகளின் கீழும் சம்பளம் பெறுபவர்கள் வரிகளை சேமிக்க பல வழிமுறைகள் உள்ளன. 


                                                நீங்கள் வரி சேமிப்பு பெற விரும்பினால் முதலில் உங்கள் சம்பளத்தை மறுசீரமைப்பு செய்யுங்கள். இது கடினமான காரியமாக இருந்தாலும் சில விஷயங்களை சம்பளத்தில் சேர்ப்பதன் மூலம் வரியை சேமிக்க முடியும். 

                                           பிற சராசரி சேமிப்பு முதலீடுகளை விட சம்பளத்தை சீரமைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பான மற்றும் திறமையான முறையில் வரியை சேமிக்கலாம். மருத்துவ செலவுகள், உணவு கூப்பன்கள் - சொடெக்ஸோ, போக்குவரத்து செலவுகள், வீட்டு வாடகை மற்றும் விடுமுறைக்கால போக்குவரத்து உதவித் தொகை போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் வரிகளை குறைக்க முடியும்.


                                          ஒரு ஆண்டுக்கு 1 இலட்சம் ரூபாய் வரையிலும் 80C பிரிவின் கீழ் தள்ளுபடி வாங்க இயலும். அதாவது உங்களுடைய வருமானம் ரூ.2.5 இலட்சமாக இருந்தால் அதில் ரூ.1 இலட்சம் வரையிலும் வரி தள்ளுபடிகளை பெற முடியும் மேலும், ரூ.6 இலட்சத்தை சம்பளமாக பெறும் தனிநபர் ஒருவர் ரூ.1 இலட்சத்தில் பாதியை மட்டுமே பயன்படுத்தி இருந்தால், அவர் ரூ.15,450-ஐ மேலும் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். 

                                         எனவே, மொத்த அளவையும் பயன்படுத்த முயற்சி செய்யவும். ஆயுள் காப்பீட்டு திட்ட பிரீமியம், பொது சேமநல நிதி, ஈகுவிட்டி தொடர்புடைய சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், ஐந்து ஆண்டுகள் கால அளவிற்கான வங்கி அல்லது அஞ்சலகங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் ஆகியவைகளை 80C பிரிவின் கீழ் வரி சேமிப்பைத் தருகின்றன.


                                        ரூ.2.5 இலட்சத்திற்கும் மேல் ஒரு ஆண்டுக்கான வருமான பெறுவகர்கள், 80C பிரிவு போதவில்லை என்று நினைக்கும் வேளைகளில் அதையும் தாண்டி செய்யக் கூடிய சில வேலைகள் உள்ளன. இது போன்ற சூழல்களில் வீட்டுக் கடன்களை பெறும் போது, ரூ.1.5 இலட்சம் வரையிலும் பணத்தை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். துணைவருக்கும் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடுகளை செய்யும் போது ரூ.1.5 இலட்சம் ரூபாய் வரை தள்ளுபடிகளை பெற முடியும் மற்றும் இது மூத்த குடிமக்களை உடைய தாய், தந்தையருக்கு ரூ.2 இலட்சம் வரையிலும் இருக்கும். 

                                              இது மட்டுமல்லாமல் வேறு சில நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் கணக்கில் கொள்ளலாம்.
உங்களுக்கான வரிச் சுமையை பெருமளவு குறைக்கும் ஒரு வழிமுறையாக இந்த வீட்டு வாடகை உதவித் தொகை உள்ளது. 

                                               உண்மையான வீட்டு வாடகை உதவித் தொகையில் இருந்து குறைந்த பட்ச பணத்தை தள்ளுபடியாக பெற முடியும்; பெறப்படும் வாடகை தொகை உங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதமாக இருக்கும். நீங்கள் வாடகை வீட்டில் இல்லாமலிருந்தால் கூட இந்த பிரிவை பயன்படுத்தும் வழிகள் உள்ளன. அதாவது உங்களுடைய பெற்றோர்கள் அல்லது தாத்தா-பாட்டிகளின் வாடகை நீங்கள் கொடுத்து விட்ட, அவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லையென்ற நிலையில், வீட்டு வாடகை உதவித் தொகையை கேட்டுப் பெற முடியும்.

                                                        வீட்டுக் கடன்களைப் பெறுவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உங்களுடைய வரிகளை சேமிக்க முடியும். முதலில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கவும் மற்றும் நீங்கள் செலுத்தும் வட்டி, அந்த வீட்டிற்கு ஆகும் செலவிற்கு ஏற்றதாக இருப்பதை படிவம்-16-ல் வரும்படி செய்வதை உறுதிப்படுத்தவும். உங்களுடைய கடனின் பெரும்பான்மையான பகுதிகள் 80C பரிவின் கீழ் வருவதன் மூலம் ரூ.1 இலட்சம் வரையில் பலன் பெற முடியும். அது மட்டுமல்லாமல் இதற்கான வட்டி ரூ.1.5 இலட்சம் வரையில் 24-வது பிரிவின் கீழ் தள்ளுபடிகளை பெறவும் உதவும்.

                                        உங்களுடைய நிறுனத்திடமிருந்து ஊக்கத்தொகை பெற்றால் அந்த ஆண்டில் அந்த பணத்திற்கு முழுமையான வரியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். 

                                   நீங்கள் அடுத்த ஆண்டு வரும் வரி சேமிப்புகளில் இதை செலுத்த விரும்பினால், உங்களுடைய நிறுவனத்தினரிடம் அடுத்த ஆண்டு போனஸ் தருமாறு கேட்கலாம். மேலும், உங்களுடைய வரி சேமிப்பு முதலீடுகளை விபரமாக கொடுப்பதன் மூலம் உங்களுடைய நிறுவனத்தினரின் ஆதரவையும் பெற இயலும்.


                                         ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் இரண்டு கட்டங்களாக கிடைக்கும் விடுமுறை போக்குவரத்து ஊக்கத்தொகையை முழுமையாக பயன்படுத்துங்கள். 

                                  இந்த நான்கு ஆண்டு கட்டங்களுக்குள் பயணம் செய்ய முடியாத போது, அவற்றை அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்குள் கொண்டு சென்று, அதன் முதல் காலண்டர் ஆண்டுக்குள் திரும்ப பெற முடியும். எனவே, இதன் மூலம் அந்த ஒரு கட்டத்தில் மட்டும் 3 தள்ளுபடிகளை நீங்கள் பெற முடியும்.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills