Cinema News


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் டோணிதான்! - பிரன்டன் மெக்கல்லம் புகழாரம்.Dhoni......!

Published: 23:01

                   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டன் டோணிதான் என்று அதிரடி மற்றும் அறிமுக வீரர் பிரன்டன் மெக்கல்லம் புகழாரம் சூட்டியுள்ளார். உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு சர்வதேச கேப்டன்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். 

                        மெக்கல்லம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். டோணி இந்திய கேப்டன். வேயன் பிராவோ மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன். பாப் டு பிளஸ்ஸிஸ், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன். ஆனால் இத்தனை கேப்டன்கள் இருந்தாலும் டோணிதான் எங்களுக்கு ஒரே கேப்டன் என்று மெக்கல்லம் டோணியின் திறமையை பாராட்டிப் புகழ்ந்துள்ளார். 

                               மெக்கல்லம் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அதிரடியாகவும் ஆடி வருகிறார். இந்த நிலையில் டோணியின் பெருமையை அவர் பாராட்டிப் பேசியுள்ளார். அதிலிருந்து...எங்களுக்கு ஒரே கேப்டன்தான். அது டோணி மட்டும்தான்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மத்தியில் கேப்டனாக உயர்ந்து நிற்பவர் டோணி மட்டுமே. 

                        அதில் மறு பேச்சுக்கே எங்களிடையே இடம் கிடையாது.அதேசமயம், போட்டிகள் இல்லாத நேரத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது மூத்த வீரர்கள் என்ற அடிப்படையில் இளம் வீரர்களுக்கு நாங்கள் நிறைய டிப்ஸ் கொடுக்கிறோம். 

                     வழி காட்டுகிறோம். பீல்டிங்கின்போது எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை நாங்களே அறிவோம் என்பதால் டோணி எங்களிடம் அதுபற்றிக் கவலையேபடுவதில்லை. நாங்களே பீல்டிங்கின்போது சரியாக நின்று கொள்வோம்.டோணி அருமையானவர். 

                       சிறந்த கேப்டன்களில் அவரும் ஒருவர். அவருடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பெருமையாக நினைக்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்க முடிகிறது என்றார் மெக்கல்லம்.டோணியும் சரி, மெக்கல்லமும் சரி கேப்டன்கள் மட்டுமல்ல. விக்கெட் கீப்பர்களும் கூட. 

                            அதிரடி பேட்ஸ்மேன்களும் ஆவர்.கடந்த தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார் மெக்கல்லம். தற்போது முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார்.






Pageviews


📰 Latest News


    Contact Form

    Name

    Email *

    Message *

    Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
    Templates Created By BTResponsive| Boost Your Skills