Cinema News


ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்! - இயக்குநர் விஜய் - அமலா பால்--

Published: 22:53

                   இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் திருமணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இருவருக்கும் வரும் ஜூன் 7-ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தமும், ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடக்கிறது. வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலா பால், விஜய்க்கு அறிமுகமானது தெய்வத் திருமகள் படத்தில். 

                        அந்தப் படத்திலிருந்தே இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அப்போதே மோப்பம் பிடித்துவிட்ட மீடியா, தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது. ஆனால் இருவருமே அப்போது உறுதியாக மறுத்து வந்தனர். 

                            இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சைவம் இசை வெளியீட்டு விழாவில், கிட்டத்தட்ட விஜய்யின் மனைவியைப் போலவே நெருக்கமாக வளைய வந்தார் அமலா. விசாரித்ததில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பது தெரிய வந்தது. 

                             இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாக வேறு வழியின்றி, காதலையும் திருமணத்தையும் ஒப்புத் கொண்டனர் இருவரும். அதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பதாகவும் கூறியிருந்தனர். சொன்னபடியே இன்று அறிவித்துள்ளனர். 

                            அதன்படி, இருவருக்கும் கொச்சியில் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடக்கிறது. மோகன்லால், மம்முட்டி உள்பட மலையாள திரையுலகினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சென்னையில் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் ஜூன் 12-ம் தேதி திருமணம் நடக்கிறது.






Pageviews


📰 Latest News


    Contact Form

    Name

    Email *

    Message *

    Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
    Templates Created By BTResponsive| Boost Your Skills