அதிமுக -15; திமுக அணி- 14; பா.ஜ.க. அணி 10 தொகுதிகளில் வெல்லும்! - ஜூனியர் விகடன் கணிப்பு !

Posted By:
Published: 22:31

                   லோக்சபா தேர்தலில் அதிமுக 15 இடங்களிலும் திமுக அணி 14 தொகுதிகளிலும் பாஜக அணி 10 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழ் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளின் கள நிலவரத்தை ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழ் பல கட்டமாக வெளியிட்டு வந்தது. 

                       அதில், நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் பெருமளவில், அதாவது 51 சதவீதம் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தது. இந் நிலையில் இப்போது வெளியிட்டுள்ள இறுதிக் கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கூட்டணி 10 தொகுதிகள் மட்டுமே கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 40 தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியும் கைப்பற்ற வாய்ப்புள்ள தொகுதிகளாக ஜூனியர் விகடன் பட்டியலிட்டுள்ளவை விவரம்:

மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்- திமுக, திண்டுக்கல்- தி.மு.க., கரூர்- தி.மு.க., பெரம்பலூர்- திமுக. நாகை- திமுக. தஞ்சாவூர்- திமுக, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகளில் திமுக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் தொகுதியிலும் மற்றொரு கட்சியான புதிய தமிழகம் தென்காசியிலும் வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.

                ஜூனியர் விகடனின் கள ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் திமுக அணிக்கு மொத்தம் 14 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அதிமுகவுக்கு 15 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஜூ.வி.திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, .திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, தேனி,.தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் 4 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாம். 

                              வேலூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் பாஜக வசமாகலாமாம். இதில் வேலூரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்திலும் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது.

                                  பாரதிய ஜனதா அணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரக்கோணம், தருமபுரி, ஆரணி ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.அதேபோல் பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு இம்முறை 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாம், ஈரோடு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளை மதிமுக கைப்பற்றுமாம்.

                      மொத்தமாக பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஐ கைப்பற்றலாம் என்கிறது ஜூ.வி.யின் கள நிலவர ரிப்போர்ட்.புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெல்லும் என்கிறது ஜூ.வி.யின் கள ஆய்வு.

0 comments:

Post a Comment





Pageviews

Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
Templates Created By BTResponsive| Boost Your Skills